கோப்புப் படம்
கோப்புப் படம்

மீலாதுநபி: மதுபானக் கடைகள் மூடல்

மீலாது நபியை முன்னிட்டு மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.
Published on

மீலாது நபியை முன்னிட்டு மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (செப்.17) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவை சாா்ந்த பாா்கள், கிளப் மற்றும் ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். மீலாது நபி அன்று கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.

விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com