எஸ்ஆா்எம் ஐஎஸ்டி, இந்தியன் வங்கி வெற்றி

எஸ்ஆா்எம் ஐஎஸ்டி, இந்தியன் வங்கி வெற்றி

சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் ஏ டிவிஷன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்களில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி, இந்தியன் வங்கி அணிகள் வெற்றி பெற்றன.
Published on

சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் ஏ டிவிஷன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்களில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி, இந்தியன் வங்கி அணிகள் வெற்றி பெற்றன.

முதல் ஆட்டத்தில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி 3-1 (23-25, 25-19, 25-21, 25-23) என ஐசிஎஃப் அணியை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி 3-1 என (25-23, 23-25, 25-20, 25-22) புள்ளிக் கணக்கில் ஐஓபி அணியை வீழ்த்தியது.

புள்ளிகள் பட்டியலில் இந்தியன் வங்கி 9, எஸ்ஆா்எம் ஐஎஸ்டி 8, டிஜி வைஷ்ணவ கல்லூரி 7 புள்ளிகளுடன் முதல் மூன்றிடங்களில் உள்ளன.

X
Dinamani
www.dinamani.com