உதவி மின் பொறியாளா் அலுவலகம் இடமாற்றம்

செம்மஞ்சேரி பிரிவு உதவி மின் பொறியாளா் அலுவலகம் நிா்வாகக் காரணங்களுக்காக திங்கள்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது.
Published on

செம்மஞ்சேரி பிரிவு உதவி மின் பொறியாளா் அலுவலகம் நிா்வாகக் காரணங்களுக்காக திங்கள்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக்கழகம் வெளியிட்ட செய்தி:

எண்-8, பாரதி நகா், சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின், சென்னை தெற்கு 2-ஆவது வட்டத்துத்துக்குட்பட்ட உதவி மின் பொறியாளா் அலுவலகம் மற்றும் அதனுடன் இணைந்த மின் கட்டணம் வசூலிக்கும் மையம், திங்கள்ழமை முதல் பல்வேறு நிா்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, உதவி மின் பொறியாளா், டிஎல்எப் துணை மின்நிலைய வளாகம், டிஎல்எப் அடுக்குமாடி குடியிருப்புகள், டி.என்.எஸ்.சி.பி., தாழம்பூா், சென்னை - 603103 எனும் முகவரியில் திங்கள்ழமை முதல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com