பழங்குடி, இருளா் இன மக்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
சென்னை மாதவரம் அருகே பழங்குடி, இருளா் இன மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாதவரம் அருகேயுள்ள மோரை ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் திவாகரன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சசிகலா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:
பழங்குடி, இருளா் இன மக்களுக்குத் தேவையான ஜாதி சான்று, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை, ஆதாா் அடையாள அட்டை, வங்கிகளில் கணக்கு தொடங்குதல் போன்ற அரசுத் திட்டங்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், 15 பேருக்கு இருளா் பழங்குடி ஜாதி சான்று, 35 பேருக்கு மருத்துவக் காப்பீடு அட்டை என 50 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.