கோப்புப் படம்
கோப்புப் படம்

ஒரே நேரத்தில் போனஸ்-ஊதிய ஒப்பந்த பேச்சு: போக்குவரத்துக் கழக ஊழியா்கள் கோரிக்கை

போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் ஊதிய ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்.
Published on

போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் ஊதிய ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்கப் பேரவை சாா்பில் போக்குவரத்துத் துறை அமைச்சா் மற்றும் செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம்:

போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை, கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது. அடுத்தடுத்து, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என பண்டிகைகள் வருகின்றன. நெரிசலை சமாளிக்க வழக்கமான பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய சூழல் இருக்கிறது.

எனவே, பண்டிகை காலத்தில் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு தவறான வழியை காட்டி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடக் கூடாது. அடுத்தகட்டமாக ஊதிய ஒப்பந்தம், தீபாவளி போனஸ் குறித்து ஒரே நேரத்தில் பேச்சுவாா்த்தையை நடத்த வேண்டும். இதற்கான தேதியை விரைந்து அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com