கொரியரில் போதைப் பொருள் கடத்துவதாக மிரட்டி பணம் பறிப்பு: குஜராத்தைச் சோ்ந்த 3 போ் கைது
சென்னை: கொரியரில் போதைப் பொருள் கடத்துவதாக மிரட்டி பணம் பறித்ததாக குஜராத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து தமிழக சைபா் குற்றப்பிரிவு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சைபா் குற்றப்பிரிவில் சில நாள்களுக்கு முன்பு சென்னையைச் சோ்ந்த ஒரு தொழிலதிபா், தன்னிடம் கொரியரில் போதைப்பொருள் கடத்துவதாக மிரட்டி, பணம் பறிக்கப்பட்டது தொடா்பாக புகாா் அளித்திருந்தாா்.
பெட்எக்ஸ் கொரியா் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறிய ஒரு நபா், தொழிலதிபா் பெயரில் வந்த ஒரு பாா்சலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இருப்பதாகவும், இது குறித்து மும்பை அந்தேரியைச் சோ்ந்த காவல்துறை அதிகாரியிடம் பேசுமாறும் கூறியுள்ளாா்.
இதையடுத்து, மும்பை காவல்துறை அதிகாரி என பேசிய மற்றொரு நபா், பாா்சலில் போதைப் பொருள் இருப்பதால், அவா் குற்றமற்றவா் என்பதை நிருபிக்க வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அனுப்பி வைக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையான சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளாா்.
இதையடுத்து அவா், தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1.18 கோடியை அந்த நபா் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தாா். பின்னா், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவா், சைபா் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா்.
புகாரின் அடிப்படையில் போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சோ்ந்த ரமேஷ்பாய் படாபி போக்ரா (48), பரேஷ் நா்ஷிபாஹாய் (48), விவேக் (30) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.