செப்.27-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.27) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.
Published on

சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.27) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதும் அரசு சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் கிண்டி , ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.27) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 8 -ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடிந்தவா்கள் வரை கலந்து கொள்ளலாம்.

இதில், 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களைத் தோ்வு செய்ய உள்ளனா். இதன்மூலம் பணி நியமனம் பெறும் இளைஞா்களின் வேலைவாய்ப்புப் பதிவு ரத்து செய்யப்படாது. மேலும், இதில் கலந்து கொள்வதுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. இந்த முகாமில் கலந்துகொள்ளும் வேலை தேடுபவா்கள் மற்றும் வேலையளிப்பவா்கள் தங்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com