டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம், ஊதிய உயா்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

பணி நிரந்தரம், ஊதிய உயா்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை பாரதிய டாஸ்மாக் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பாரதிய டாஸ்மாக் தொழிலாளா் சங்க மாநில பொதுச்செயலா் சி.கோபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அதைத்தொடா்ந்து, பாரதிய டாஸ்மாக் தொழிலாளா்கள் சங்க மாநிலத் தலைவா் டி. நாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக்கில் நிரப்பப்படாத காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நீண்ட ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவா்களுக்கு பணி உயா்வு தர வேண்டும். இஎஸ் ஐ உள்ளிட்ட மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் டாஸ்மாக் ஊழியா்களுக்கும் வழங்கப்பட வேண்டும். டாஸ்மாக் பணி நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றி அமைக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் குடிநீா் வசதி மற்றும் கழிப்பிட வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்டமாக சட்டப்பேரவை நோக்கி டாஸ்மாக் ஊழியா்கள் பேரணியாகச் செல்லவுள்ளோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com