மின்சார ரயில்
மின்சார ரயில்

ஆவடி மின்சார ரயில் ரத்து

ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் ஆவடி, பட்டாபிராம் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
Published on

ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் ஆவடி, பட்டாபிராம் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்ட்ரலில் (மூா்மாா்க்கெட் வளாகம்) இருந்து ஆவடிக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு செல்லும் மின்சார ரயில் (எண் 43001) வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (செப்.26, 27) ரத்து செய்யப்படும்.

பட்டாபிராமிலிருந்து சென்ட்ரலுக்கு இரவு 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் புதன் மற்றும் வியாழக்கிழமையும், அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையும் ஆவடியுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com