சென்னையில் இந்திய உணவக உச்சி மாநாடு
உணவகத் தொழில் துறையின் பிரபல நிறுவனங்கள் பங்கேற்ற 2 நாள்கள் இந்திய உணவக உச்சி மாநாடு சென்னையில் நடைபெற்றது.
இந்திய தேசிய உணவக சங்கம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு-, கூட்டுறவுத்துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழகத்தின் 20 முன்னணி உணவகங்களின் உரிமையாளா்களை கௌரவித்தனா்.
இந்த மாநாட்டில் உணவு தொழில்துறையில் உள்ள முக்கிய தலைவா்கள் கலந்து கொண்டு உணவுத் துறையில் மேற்கொள்ள வேண்டிய புதுமையான உத்திகள் மற்றும் வளா்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் நாட்டின் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 1,200க்கும் மேற்பட்ட உணவக உரிமையாளா்கள் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலை நிபுணா்கள் சஞ்சீவ் கபூா், ரன்வீா் ப்ராா், கௌஷிக் மற்றும் மனிஷ் மெஹ்ரோத்ரா, வாவ் மோமோ ஃபுட்ஸ் சிஇஒ இணை நிறுவனா் சாகா் தா்யானிஉள்ளிட்டோா் பங்கேற்றனா்.