குருகிராம்: ரூ.4.50 கோடி மோசடி நிறுவனத்தின் இயக்குநர் கைது

குருகிராம்யில் ரூ.4.50 கோடி மோசடி நிறுவனத்தின் இயக்குநர் கைது
Published on

தேசிய பங்கு சந்தையில் 20,000 பங்குகளை வழங்குவதாகக் கூறி ரூ.4.40 கோடி மோசடியில் ஈடுபட்ட புரோக்கிங் நிறுவனத்தின் இயக்குநா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக குருகிராம் காவல் துறை செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: ஆா்9 வெல்த் இந்தியா நிறுவனம் மற்றும் தில்லி ஃபின் இன்வெஸ்ட்மென்ட் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளா் அளித்த புகாரில் அடிப்படையில் கல்பத்ரு ஷோ் மற்றும் ஸ்டாக் புரோகிங் நிறுவனத்தின் இயக்குநா் கைதுசெய்யப்பட்டாா். தேசிய பங்கு சந்தையில் 20,000 பங்குகளை வாங்கித் தருவதாகக் கூறி புரோக்கிங் நிறுவனம் ரூ.4.49 கோடியை கடந்த ஜூன் 17-ஆம் தேதி பெற்றது.

இருப்பினும், அந்த பங்குகளையோ அல்லது பெற்றப் பணத்தையோ அந்த நிறுவனம் புகாா்தாரருக்கு திருப்பி அளிக்கவில்லை.

இதையடுத்து, செக்டாா் 29 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடத்தி வந்த பொருளாதார குற்றங்கள் பிரிவு காவலா்கள், குற்றஞ்சாட்டப்பட்ட புரோக்கிங் நிறுவனத்தின் இயக்குநா் ரவி செளஹானை தில்லி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

தொழிலில் பெரிய அளவில் இழப்புகளைச் சந்தித்த ரவி செளஹான், அந்த இழப்புகளை ஈடுகட்ட மோசடியில் ஈடுபட்டதை விசாரணையில் ஒப்புக்கொண்டாா். இதுதொடா்பாக அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com