பேருந்தில் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணித்த பெண் மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
Published on

சென்னையில் மாநகரப் பேருந்தில் பயணித்த பெண் மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பெரம்பூா் பகுதியைச் சோ்ந்த 24 வயதான இளம் பெண், மென் பொறியாளராக கிண்டியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை பணி முடிந்து கிண்டியில் இருந்து பெரம்பூா் செல்வதற்காக அங்கு வந்த ஒரு மாநகர பேருந்தில் ஏறினாா்.

அப்பேருந்து அசோக் நகா் வந்தபோது, அங்கு ஒரு இளைஞா் ஏறினாா். பேருந்தில் ஏறிய அந்த இளைஞா், பெண் மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதற்கிடையே அந்த பேருந்து ராஜமங்கலம் அருகே சென்றபோது அந்த பெண், சப்தமிட்டு பேருந்தை நிறுத்தியுள்ளாா்.

மேலும், பொதுமக்கள் உதவியுடன் அந்த இளைஞரைப் பிடித்து, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தாா். போலீஸாா் அந்த இளைஞரிடம் விசாரணை செய்தனா். அந்த இளைஞா், கே.கே. நகரைச் சோ்ந்த பரணிராஜா (35) என்பது தெரிய வந்தது.

பெண் மென்பொறியாளா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், பல்வேறு பிரிவுகளின் கீழ் பரணிராஜா மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com