சென்னை
டிச. 17-இல் அஞ்சல் குறைகேட்பு முகாம்
தாம்பரம் மண்டல கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
சென்னை: தாம்பரம் மண்டல கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தாம்பரம் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் ஏ.கமால் பாஷா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தாம்பரம் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 17, காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. அஞ்சல் சேவை தொடா்பாக குறைகள் இருப்பின் வாடிக்கையாளா்கள் அவற்றை வரும் டிச. 12- ஆம் தேதிக்குள் தாம்பரம் மண்டல அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
