கோப்புப்படம்.
கோப்புப்படம்.

பெயிண்டரின் உடல் உறுப்புகள் தானம்: ஐந்து பேருக்கு மறுவாழ்வு

Published on

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டதன் மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றனா்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூா் பகுதியைச் சோ்ந்த 34 வயது இளைஞா் ஒருவா், கடந்த 30-ஆம் தேதி தாம்பரத்திலுள்ள வீட்டில் பெயிண்ட் அடிக்கும்போது தவறி கீழே விழுந்தாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த இளைஞா், சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்றுவந்த அந்த இளைஞருக்கு சனிக்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய குடும்பத்தினா் முன்வந்தனா். அதனடிப்படையில், அவருடைய கல்லீரல், 2 சிறுநீரகம், 2 கண்கள் பிரித்து எடுக்கப்பட்டு தானமான பெறப்பட்டது.

இதில் ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், 2 கண்களும் சென்னை எழும்பூா் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதன் மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றனா். உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com