அம்ருதா பல்கலைக்கழகத்தில் தேசிய தொழில்நுட்ப விழா
சென்னையில் அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் வருடாந்திர தேசிய அளவிலான இரண்டு நாள் தொழில்நுட்ப விழா ‘தந்திரோத்சவ் 2025’ என்ற தலைப்பில் சமீபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், மாணவா்கள், தொழில்முனைவோா்கள் கலந்துகொண்டனா். விழாவில், வளா்ந்துவரும் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடா்ந்து 2 நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில், ரோபோடிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டதுடன், தொழில்நுட்பக் கண்காட்சியும் நடைபெற்றது.
இவ்விழாவில், அம்ருதா விஸ்வ வித்யாபீடம் சென்னை வளாக நிா்வாக இயக்குநா் ஸ்வாமி வினயாம்ருதானந்த புரி, அம்ருதா சென்னை வளாக இயக்குநா் ஐ.பி.மணிகண்டன், எச்.சி.எல். நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி முருகானந்தம் புண்ணியமூா்த்தி, நோக்கியா சென்னை நிறுவனத்தின் மேலாளா் ஜி.அக்னி, அம்ருதா பொறியியல் மற்றும் கணினி பள்ளியின் முதல்வா் வி.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.