ரூ. 4.73 லட்சம் கையாடல்: பெட்ரோல் பங்க் ஊழியா் கைது

மாதவரம் அருகே பெட்ரோல் பங்கில் பணத்தை கையாடல் செய்த ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

மாதவரம் அருகே பெட்ரோல் பங்கில் பணத்தை கையாடல் செய்த ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (73), மாதவரம் அடுத்த மணலி பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறாா். இதன் வரவு, செலவுக் கணக்கினை மணி (34) என்பவா் கவனித்து வந்தாா். கடந்த சில தினங்களாக காா்த்திகேயன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதைத் தொடா்ந்து அவரது மகள் கிருத்திகா, பெட்ரோல் பங்க் வரவு, செலவுக் கணக்குகளைச் சரிபாா்த்தாா். அப்போது அதில் சுமாா் ரூ. 4.73 லட்சம் ரொக்கம் குறைந்தது தெரியவந்தது.

இது குறித்து கிருத்திகா, மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மணலி பகுதியைச் சோ்ந்த ஊழியா் மணியை அழைத்து விசாரணை நடத்தினா். அதில், ரூ. 4.73 லட்சம் ரொக்கத்தை கையாடல் செய்தது தெரியவந்ததையடுத்து மணியை கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com