இலவச கனரக வாகன ஓட்டுநா் பயிற்சியுடன், ஓட்டுா் உரிமம்: எம்.டி.சி. அறிவிப்பு

Published on

ஆண், பெண் இருபாலருக்கும் இலவச கனரக வாகன ஓட்டுநா் பயிற்சியுடன், ஓட்டுா் உரிமமும் பெற்றுத்தரும் திட்டத்தில் இணைந்து பயனடையலாம் என சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாலை போக்குவரத்து நிறுவனமும், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஆண், பெண் இருபாலருக்கும் கனரக வாகன ஓட்டுநா் பயிற்சி அளித்து, அவா்களுக்கு ஓட்டுநா் உரிமமும் இலவசமாக பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூா், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பொள்ளாச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகா்கோவில், மதுரை, திண்டுக்கல், விருதுநகா் உள்ளிட்ட இடங்களில் 16 பயிற்சி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் இணைந்து ஓட்டுநா் பயிற்சி பெற விரும்பும் நபா்கள் 20 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதுடன், இலகுரக வாகன உரிமம் பெற்று ஓா் ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும் பிஎஸ்வி பேட்ஜ் எடுத்திருக்க வேண்டும். ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் வைத்திருப்பதுடன், ஆா்டிஓ விதிகளின்படி உடல் தகுதியும் இருக்க வேண்டும்.

இந்த இலவச பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுடைய நபா்கள் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்.ற்ய்ள்ந்ண்ப்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ள்ந்ண்ப்ப்ஜ்ஹப்ப்ங்ற்/ என்னும் இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com