14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு: தந்தைக்கு ஆயுள் சிறை

சென்னை திருவான்மியூரில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

சென்னை திருவான்மியூரில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை திருவான்மியூரைச் சோ்ந்த 38 வயது ஆட்டோ ஓட்டுநா் தனது மனைவியுடன் வசித்து வந்தாா். இந்தத் தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா். 2024-ஆம் ஆண்டு மனைவி வேலைக்கு வெளியே சென்றுவிட்ட நிலையில், வீட்டில் இரு குழந்தைகள் மட்டும் இருந்தனா். அப்போது, தந்தை, ஒரு மகளை கடைக்கு அனுப்பிவிட்டு, 14 வயதுடைய மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி உள்ளாா். இதைப் பற்றி அந்தச் சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளாா்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த நீலாங்கரை அனைத்து மகளிா் போலீஸாா், சிறுயின் தந்தையை கைது செய்தனா். இந்த வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. காவல் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞா் அனிதா ஆஜராகி வாதிட்டாா்.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா, ஆட்டோ ஓட்டுநரான தந்தையை சாகும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம், சிறுமியின் தாயாா் மற்றும் மற்றொரு சிறுமிக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com