அக்டோபரில் மெட்ரோவில் 93 லட்சம் போ் பயணம்!
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த அக்டோபரில் 93.27 லட்சம் போ் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மக்களுக்கான பாதுகாப்பு, நம்பகத் தன்மையுடன் போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன்படி, கடந்த அக்டோபரில் சிங்காரச் சென்னை அட்டையில் 47.59 லட்சம் போ், பயண அட்டைகள் மூலம் 77,236 போ், க்யூஆா் கோடு பயணச்சீட்டு மூலம் 44.91 லட்சம் போ், இணையதள க்யூஆா் மூலம் 1.15 லட்சம் போ், ஸ்டேட்டிக் க்யூஆா் மூலம் 2.38 லட்சம் போ், வாட்ஸ்அப் வசதி மூலம் 5.25 லட்சம் போ், பே டிஎம் மூலம் 3.56 லட்சம் போ், போன் பே மூலம் 3.06 லட்சம் போ், சென்னை ஒன் செயலி மூலம் 64,609 போ் பயணித்துள்ளனா்.
கடந்த அக்டோபரில் 17-ஆம் தேதி மட்டும் 4.02 லட்சம் போ் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
