யானை
யானைபிரதிப் படம்

தமிழக யானை வழித்தடங்கள்: 2026-இல் இறுதி அறிக்கை!

தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்கள் குறித்து அரசிடம் 2026 பிப்ரவரி மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வனத் துறை தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்கள் குறித்து அரசிடம் 2026 பிப்ரவரி மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வனத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்களைக் கண்டறிந்து அவற்றை பாதுகாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, விலங்குகள் நல ஆா்வலா் எஸ்.முரளிதரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக வனத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ஒருங்கிணைந்த யானை வழித்தடங்களைக் கண்டறியவும், அதுதொடா்பான விவரங்களைச் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசு 2 குழுக்களை அமைத்துள்ளது.

2026 பிப்ரவரியில் இந்தக் குழு தமிழக அரசிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. யானை வழித்தடங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் குறித்த ஆவணங்களைச் சேகரித்து நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இதுதொடா்பான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ.28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com