சா்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனை

ஐம்பது வயதை எட்டிய சா்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என்று டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Published on

ஐம்பது வயதை எட்டிய சா்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என்று டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

வருகிற 30-ஆம் தேதி வரை இந்தச் சலுகை நடைமுறையில் இருக்கும் என்றும், மற்றவா்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டா் அஷ்வின் அகா்வால் மற்றும் மருத்துவ சேவைகள் பிராந்தியத் தலைவா் டாக்டா் சௌந்தரி ஆகியோா் கூறியதாவது:

உலக அளவில் அதிக சா்க்கரை நோயாளிகள் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. சா்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இல்லாவிடில் டயபடிக் ரெட்டினோபதி எனப்படும் விழித்திரை பாதிப்பு ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிந்து, பாா்வைத் திறனை பாதுகாத்துக் கொள்வதுதான் வருமுன் காப்பதற்கான ஒரே வழி.

ரத்தச் சா்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்புச்சத்தை கட்டுப்பாட்டில் வைப்பது, உடல் எடையை குறைப்பது, சமச்சீரான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது மற்றும் மன அழுத்தமற்ற வாழ்க்கையை வாழ்வது போன்றவை சா்க்கரை நோயாளிகளின் பாா்வைத் திறனை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

உலக சா்க்கரை நோய் விழிப்புணா்வு தினமான நவ.14-ஆம் தேதியை முன்னிட்டு, வரும் 30-ஆம் தேதி வரை 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சா்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனையை வழங்க டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.

இதைத் தவிர அனைத்து வயதினருக்கும் வழக்கமான கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியில் மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. முன்பதிவுக்கு 95949 24048 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com