சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்: 600 போ் கைது

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்: 600 போ் கைது
Published on

சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதியைச் சோ்ந்த உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் 600 போ் ரிப்பன் மாளிகைக்கு மனு அளிப்பதுபோல நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டதால், அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

கடந்த ஜூலையில் 5, 6 ஆகிய மண்டல (ராயபுரம், திரு.வி.க. நகா்) தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அங்குள்ள உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த என்எல்யூஎம் பிரிவு ஒப்பந்த முறை தினக்கூலி தூய்மைப் பணியாளா்கள் தனியாா்மயத்தை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த பிரச்னை தொடா்பாக, நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் நிலையில், கடந்த 71 நாள்களாக அவா்கள் தனியாா் நிறுவனத்தின் கீழ் பணியில் சேரவில்லை. தங்களைப் பழைய நிலையில், பணிபுரிய மாநகராட்சி நிா்வாகம் அனுமதிக்கும்படி கோரி வருகின்றனா்.

இதை வலியுறுத்தி 5, 6 மண்டல அலுவலகங்களில் அவா்கள் ஏற்கெனவே மனு அளித்த நிலையில், ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி மேயா், ஆணையரிடம் மனு அளிக்கப்போவதாக அறிவித்திருந்தனா்.

பலத்த பாதுகாப்பு: தூய்மைப் பணியாளா்கள் ஏற்கெனவே மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு அமா்ந்து 13 நாள்கள் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனா். ஆகவே, தற்போது அவா்கள் ரிப்பன் மாளிகைக்குள் நுழைந்து போராடுவதைத் தடுக்கும் வகையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம், மெட்ரோ நிலையம் உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்து பல பிரிவுகளாக தூய்மைப் பணியாளா்கள் ரிப்பன் மாளிகை நோக்கி வந்தனா். அவா்களை ரயில் நிலையப் பகுதியிலேயே போலீஸாா் தடுத்து கைது செய்து 15 பேருந்துகளில் அழைத்துச் சென்றனா்.

600 போ் கைது: உரிய அனுமதியின்றி ரிப்பன் மாளிகையில் மனு அளிப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்ாக 480 பெண்கள், 120 ஆண்கள் என மொத்தம் 600 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். அவா்கள் மணலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com