

கொளத்தூர் வண்ணமீன் வர்த்தக மையம், உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் 15,945 சதுர மீட்டர் நிலப் பரப்பளவில் 11,650 சதுர மீட்டர் கட்டடப் பரப்பளவில் ரூ. 53 கோடி செலவில் மொத்தம் 188 கடைகள், அதில் 5 உணவகங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த வண்ண மீன் வர்த்தக மையத்தில், மொத்தம் மற்றும் சில்லறை வண்ண மீன்கள் விற்பனை செய்வதற்காக 185 கடைகள், ஆய்வகம், பயிற்சிக் கூடம், உணவு அரங்கம், பாா்வையாளர் அரங்கம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக முதல்வர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”சென்னையில் வண்ணமீன்கள் விற்பனை என்றாலே, அது கொளத்தூர்தான்!
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வண்ணமீன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர்; 2021-22-ஆம் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தேன்;
நேற்று - வில்லிவாக்கம் சிவசக்தி நகரில், இந்தியாவிலேயே முதன்முறையாக உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள “கொளத்தூர் வண்ணமீன் வர்த்தக மைய”த்தைத் திறந்து வைத்தேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: 53 கிலோ கோயில் நகைகள் ஸ்டேட் வங்கியில் முதலீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.