மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்டத் திட்டத்தில் 3-ஆம் வழித்தடத்துக்கான சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
Updated on
1 min read

சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்டத் திட்டத்தில் 3-ஆம் வழித்தடத்துக்கான சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தில் மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு ரயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.

அதில் 3 ஆம் வழித்தடம் ராயப்பேட்டை நிலையத்திலிருந்து ஆர்.கே.சாலை நிலையம் வரையில் 910 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்றது.

சுரங்கம் தோண்டும் பணியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்துக்கு "பவானி' எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. தனியார் நிறுவனம் மேற்கொண்டுவரும் இந்தப் பணி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ராயப்பேட்டை நெடுஞ்சாலை, பீட்டர்ஸ் சாலை பாலத்துக்கு கீழ் மற்றும் ராயப்பேட்டை கண் மருத்துவமனையின் அடிப்பகுதியில் சுரங்கம் தோண்டியபோது, சவாலாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பணி நிறைவு பெற்ற இடத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், பொது மேலாளர்கள் ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி, எம்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நேரில் வந்து பார்வையிட்டனர். பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

கிரீன்வேஸ் சாலையிலிருந்து நடைபெறும் மெட்ரோ ரயில் பாதையில் 2 சுரங்கம் தோண்டும் பணி, மந்தைவெளிப் பகுதி வரை நடைபெற்றுள்ளது. நவம்பருக்குள் இந்தப் பணி நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com