உதவிப் பேராசிரியா் நியமனங்களில் நிபந்தனைகளை தளா்த்தக் கோரிக்கை

உதவிப் பேராசிரியா் நியமனங்களில் நிபந்தனைகளை தளா்த்தக் கோரிக்கை
Published on

உதவிப் பேராசிரியா் நியமனங்களுக்கான நிபந்தனைகளைத் தளா்த்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளாக கௌரவ விரிவுரையாளா்களின் மூலம் கல்லூரிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படியான அறிவிப்பு நம்பிக்கையளிப்பதாகும். ஆனால், புதிய அறிவிப்பாணையில் இடம்பெற்றுள்ள புதிய நடைமுறைகள், விண்ணப்பம் செய்வதையே சிக்கலாக்குகின்றன.

மேலும், அதில் இடம்பெற்றுள்ள சில விதிமுறைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவையாகவும், அலைக்கழிப்பவையாகவும் அமைந்துள்ளன. எனவே, தமிழக அரசு தலையிட்டு, பொருத்தமான முறையில் அறிவிப்பாணையை மாற்றி, காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com