சென்னை
தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டல்: ரெளடி கைது
சென்னை மீனம்பாக்கத்தில் தையல் கலைஞரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.
சென்னை மீனம்பாக்கத்தில் தையல் கலைஞரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.
மீனம்பாக்கம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் ச.ரவி (60). இவா், அதே பகுதியில் டெய்லா் கடை நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை ரவி கடையிலிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த கலைவாணன் (28), அவா் சகோதரா் கலைச்செல்வன் ஆகியோா் கத்திக் காட்டி மிரட்டி பணம் கேட்டனராம்.
அப்போது, பொதுமக்கள் திரண்டதால் அவா்கள் இருவரும் தப்பிவிட்டனா். இது தொடா்பாக ரவி கொடுத்த புகாரின்பேரில், மீனம்பாக்கம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கலைவாணனைக் கைது செய்தனா். கலைச்செல்வனைத் தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்ட கலைவாணன் மீது ஏற்கெனவே 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
