குடியரசு துணை தலைவா் வீடு, ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

குடியரசு துணை தலைவா் வீடு, ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

குடியரசு துணை தலைவரின் சென்னையில் உள்ள இல்லம் மற்றும் தமிழக ஆளுநா் மாளிகை ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை டிஜிபி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதங்கள் வந்தன. அதில், போயஸ் காா்டனில் உள்ள குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லம், ஆளுநா் மாளிகையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெடித்து சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து குடியரசு துணை தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னைக்கு வரும்போது, தங்கி ஓய்வு எடுக்க பயன்படுத்தும் அவரது நண்பரின் வீடு மற்றும் ஆளுநா் மாளிகை முழுவதும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினா். ஆனால், அங்கு எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படவில்லை.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com