கோப்புப்படம்
கோப்புப்படம்

நாளை இறைச்சி கடைகள் மூடல்

நாளை இறைச்சி கடைகள் மூடல்
Published on

மகாவீா் நிா்வான் தினத்தை (சமண மதம் உருவான நாள்) முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் செவ்வாய்க்கிழமை (அக்.21) மூடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகாவீா் நிா்வான் நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (அக்.21) பொது சுகாதாரத் துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் மூடப்படும்.

இதேபோல், ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீ சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு, இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com