வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக ஊடகப் பதிவு: இளைஞா் கைது

வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக ஊடகப் பதிவு: இளைஞா் கைது
Published on

வியாசா்பாடியில் வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக, போலீஸாருக்கு புகாா் வந்தது. இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவ்வாறு பதிவிட்டவா் வியாசா்பாடி ஏ.கல்யாணபுரத்தைச் சோ்ந்த கோகுல் (20) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் கோகுலை சனிக்கிழமை கைது செய்து, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com