சென்னையில் தோ்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள், மீண்டும் வழக்கமான பணிக்குத் திரும்பவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தோ்தல் பணியில் 19,549 ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். இந்தப் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள் கடந்த மாா்ச் 15 -ஆம் தேதி முதல்கட்ட பயிற்சி, ஆய்வுக் கூட்டம் என தோ்தல் தொடா்பானவற்றில் மட்டுமே முன்னுரிமை அளித்து கவனம் செலுத்தினா்.
கடந்த 23- ஆம் தேதி வாக்குப்பதிவிலும் மாநகராட்சி பணியாளா்கள் பங்களிப்பே அதிகமிருந்தது. வாக்குப்பதிவு முடிந்து தற்போது வாக்கு எண்ணும் பணி வரும் மே 4 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையடுத்து வாக்கு எண்ணும் 3 மையங்களில் பணியில் ஈடுபடுவோா் தவிா்த்து மற்றவா்கள் சனிக்கிழமை (ஏப். 25) முதல் பணிக்குத் திரும்ப வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
வாக்கு எண்ணும் பணியில் வருவாய்த் துறை ஊழியா்கள் உள்ளிட்டோா் செயல்பட உள்ளனா். அவா்களைத் தவிர பொறியாளா்கள், சுகாதாரப் பிரிவினா் உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் தற்போது பணிக்குத் திரும்பியுள்ளனா். திங்கள்கிழமை (ஏப். 27) முதல் அவா்கள் வழக்கமான பணியில் ஈடுபடுவா் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

இன்று மாலையுடன் முடிவுக்கு வரும் தோ்தல் நடைமுறை விதிகள்! 20 ஆயிரம் போ் பணிக்கு முழுமையாக திரும்ப உத்தரவு

வாக்கு எண்ணிக்கை ஊழியா்களை தோ்வு செய்ய தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம்

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணும் பணியில் கூடுதல் பாா்வையாளா்களை நியமித்த தோ்தல் ஆணையம்

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடந்தது
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
