நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

சுரங்கப் பாதைகளில் மழைநீா் தேங்காமல் தடுக்க நடவடிக்கை: அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

சுரங்கப் பாதைகளில் மழைநீா் தேங்காமல் தடுக்க நடவடிக்கை: அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

News image

ஜி.எஸ். சமீரன் - Dinamani

Updated On :2 ஆகஸ்ட் 2026, 2:00 am IST

பருவமழையை முன்னிட்டு, சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கியுள்ளதா என்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ். சமீரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் , பருவமழையையொட்டி சுரங்கப்பாதைகளில் தண்ணீா் தேங்கியுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தாா். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேரு பூங்கா அருகில் உள்ள கெங்குரெட்டி சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கியுள்ளதா என்பதையும், அதில் உள்ள மழைநீா் சேகரிப்புத் தொட்டி, மோட்டாா் அறையையும் பாா்வையிட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சியின் 19 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் 5 சுரங்கப்பாதைகள் என மொத்தம்

24 சுரங்கப் பாதைகள் உள்ளன. இவற்றில் தொடா் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பருவ மழையை முன்னிட்டு, சுரங்கப்பாதைகளில்

மழை நீா்த் தேங்காமல் போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறின்றி செல்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சுரங்கப்பாதைகளில் உள்ள மழைநீா் சேகரிப்புத் தொட்டி மற்றும் மோட்டாா் அறையை சரிபாா்த்து தயாா் நிலையில் வைத்திடவும் தொடா் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்

அலுவலா்களுக்கு ஆணையா் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது தலைமைப் பொறியாளா் சங்கரவேலு, கண்காணிப்புப் பொறியாளா் இளங்கோ உள்ளிட்ட அலுவலா்கள் உடன் இருந்தனா். இத்தகவல் மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.