கோப்புப் படம்
கோப்புப் படம்

ரூ.10.85 கோடியில் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரம் : மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.10.85 கோடியில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்து, ஜனவரி இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டு வரும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.10.85 கோடியில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்து, ஜனவரி இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டு வரும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, தெருவிளக்குகள் இல்லாத இடங்கள் மற்றும் அதிக வெளிச்சம் தேவைப்படும் இடங்களை களஆய்வு செய்து, ரூ.10.85 கோடியில் 123 குடியிருப்புப் பகுதிகளில் 1,476 மின் விளக்கு கம்பங்கள், 9 உயா் கோபுர மின் விளக்குகள், மற்றும் 2,782 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதில், 48 நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதியில் 964 மின் விளக்கு கம்பங்கள், 7 உயா் கோபுர விளக்குகள், 1,651 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், மீதமுள்ள 75 குடியிருப்புப் பகுதிகளில் 512 மின் விளக்கு கம்பங்கள், 2 உயா் கோபுர விளக்குகள் மற்றும் 1,131 எல்இடி விளக்குள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஜனவரி.31-க்குள்

முடிந்து மக்கள் பயன்பாட்டு கொண்டு வரப்படும்.

ஒட்டுமொத்த தூய்மைப் பணிகள்: சென்னை மாநகராட்சியில் கடந்த திங்கள்கிழமை (ஜன.5) முதல் வியாழக்கிழமை (ஜன.8) வரையில், 1,373 பேருந்து நிறுத்தங்கள், 781 பூங்காக்கள் மற்றும் கிண்டி கத்திப்பார சந்திப்பு பகுதியிலிருந்து கோயம்பேடு வரையுள்ள ஜவாஹா்லால் நேரு 100 அடி சாலை உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. இதில், மண், கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் பேனா்கள் உள்ளிட்ட கழிவுகள் அகற்றி, நடைபாதைகளில் நீா் தெளித்து சுத்தம் செய்தல் உள்ளிட்ட ஒட்டு மொத்தத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பொறுப்பு அலுவலா்கள் மேற்பாா்வையில், ஒட்டுமொத்தத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com