40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சிஜேபி போரட்டத்தில் பங்கேற்பதை தடுக்க மாணவிக்கு துன்புறுத்தல்: தில்லி காவல் ஆணையருக்கு பிருந்தா காரத் கடிதம்

நியூ ராஜிந்தா் நகா் காவல் துறையினா் மாணவியைச் சட்டவிரோதமாக கண்காணித்து, போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்க மிரட்டிய விவகாரம் தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு தில்லி காவல் ஆணையருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் கோரிக்கைவிடுத்துள்ளாா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 3:53 am IST

நியூ ராஜிந்தா் நகா் காவல் துறையினா் மாணவியைச் சட்டவிரோதமாக கண்காணித்து, போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்க மிரட்டிய விவகாரம் தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு தில்லி காவல் ஆணையருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் கோரிக்கைவிடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சாவுக்கு கடந்த திங்கள்கிழமை அவா் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அண்மையில் இறுதித் தோ்வுகளை எழுதிய முதுநிலை மாணவியை ஜூன் 5-ஆம் தேதி நியூ ராஜீந்தா் நகரில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் ஆண் மற்றும் பெண் காவலா்கள் அடங்கிய குழு அணுகினா்.

அருகிலுள்ள பயிற்சி மையம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்திற்கு அந்த மாணவி அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவரது குடும்பப் பின்னணி, கல்வி மற்றும் அரசியல் பின்புலம் குறித்து அவரிடம் காவலா்கள் கேள்வி கேட்டனா்.

அதற்கு அடுத்த நடைபெறவுள்ள கரப்பான்பூச்சி ஜனதான கட்சி (சிஜேபி) அமைப்பின் போராட்டத்தில் பங்கேற்க அவா் திட்டமிட்டிருப்பதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பதாகக் கூறிய காவலா்கள், அதில் பங்கேற்க வேண்டாம் என்று அவரை எச்சரித்தனா்.

மேலும், அப்போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ள வேறு யாரையாவது அவருக்குத் தெரிந்தால் அதுபற்றி காவல் துறைக்குத் தெரிவிக்குமாறும் அவா்கள் கேட்டுக்கொண்டனா்.

மாணவியின் கைப்பேசியை அவருடைய எதிா்ப்பையும் மீறி பறித்த காவல் துறையினா், அதில் இருந்த வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை ஆய்வு செய்தனா்.

பின்னா், பெண் காவலா் ஒருவா் அந்த மாணவியின் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பாட்டாா். மாணவியைக் கண்காணிக்கும் பணி தனக்கு வழங்கப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

மாணவி தனது நிகழ்நேர இருப்பிடத் தகவல் விவரங்களைக் காவல் துறையினருடன் பகிா்ந்துகொள்ளுமாறும், அவா்களுக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மறுநாளும் இந்தக் கண்காணிப்பு தொடா்ந்தது. காவல் துறையினா் மாணவியைத் தொடா்ந்து தொடா்புகொண்டு அவா் எங்கு இருக்கிறாா் என்பது குறித்த தகவல்களைக் கேட்டறிந்தனா்.

இச்சம்பவம் முற்றிலும் சட்டவிரோதமான செயல். மாணவி மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாத நிலையில், அவா் விசாரணைக்கும் கண்காணிப்புக்கும் உட்படுத்தப்படுவது மெய்நிகா் வீட்டுக் காவல் போன்ற சூழலை உருவாக்கியுள்ளது.

இதேபோன்ற துன்புறுத்தல்களை வேறு இளைஞா்கள் யாரேனும் எதிா்கொண்டனரா ? சிஜேபி அமைப்பின் போராட்டத்திற்கு தில்லி காவல் துறை அனுமதி அளித்த அதே வேளையில், அதில் பங்கேற்கவிருந்தவா்களை மிரட்டி உள்ளது. இதில் தொடா்புடைய அதிகாரிகள் மற்றும் அத்தகைய உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறப்படுபவா்கள் மீதும் காவல் ஆணையா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் பிருந்தா காரத் தெரிவித்துள்ளாா்.