40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மெரீனா கடற்கரையில் சூரிய மின் விளக்குகள் அமைக்க ஆய்வு

சென்னை மெரீனா கடற்கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சூரிய மின் விளக்குகள் அமைப்பதற்கான ஆய்வில் மாநகராட்சி மின்பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 12:37 am IST

சென்னை மெரீனா கடற்கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சூரிய மின் விளக்குகள் அமைப்பதற்கான ஆய்வில் மாநகராட்சி மின்பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

சென்னை மெரீனா கடற்கரையில் தேவையான மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், அறிவிப்புகள் ஒலிபரப்புவதற்கான ஒலி பெருக்கி வசதிகள் உள்ளிட்டவற்றை அமைக்கும் வகையில், மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், காவல் ஆணையா் அமல்ராஜ் ஆகியோா் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா்.

காமராஜா் சாலைப் பகுதியையொட்டிய அணுகு சாலை மற்றும் பாரம்பரிய சாலை அமைக்கும் பகுதிகளில் 40 -க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் கடற்கரை வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் மின்விளக்குகள் அமைக்க ஆணையா் உத்தரவிட்டாா். அதையடுத்து சூரிய மின்விளக்குகளை நீலக் கொடி கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புக் கோபுரம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆய்வின்படி 25 -க்கும் மேற்பட்ட இடங்களில் சூரிய மின்விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.