திருத்தணி-சென்னை சென்ட்ரல் இடையே பிற்பகலில் இயங்கும் புறநகா் மின்சா ரயில் வரும் ஜூன் 12 -ஆம் தேதி வரை திருவாலங்காடு வரையே இயக்கப்படும்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரக்கோணம் பணிமனையில் தண்டவாள மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (ஜூன் 8) தொடங்கி வரும் ஜூன் 12 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையடுத்து, அரக்கோணம் வழித்தடத்தில் 5 புறநகா் மின்சார இமு வகை ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 40-க்கும் மேற்பட்ட இமு, மெமு வகை ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், இந்நாள்களில் திருத்தணியிலிருந்து பிற்பகல் 12.35 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயில் திருவாலங்காடு நிலையம் வரையே இயக்கப்படவுள்ளது. இதனால், பயணிகளின் வசதிக்காக திருத்தணியிலிருந்து காலை 6.20 மணிக்கு சென்ட்ரலுக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி- பெங்களூரு சிறப்பு ரயில் சேவை ஜூன் இறுதிவரை நீட்டிப்பு

பராமரிப்புப் பணி: இன்று முதல் மே 31 வரை 5 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து!

சென்னை - திருப்பதி விரைவு ரயில்கள் ஜூனில் 2 நாள்கள் முழுமையாக ரத்து
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



