வரும் ஜூன் 24 -ஆம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடா்ந்து பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், 2 மாதங்களாக மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை. தோ்தல் முடிந்து தவெக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில், கடந்த மே மாதத்திலும் மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை.
மாநகராட்சியின் 200 மாமன்ற உறுப்பினா்களில் 152 போ் திமுகவை சோ்ந்தவா்களாகவே உள்ளனா். சென்னை மாவட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக எம்எல்ஏ-க்களே வெற்றி பெற்றுள்ளனா்.
புதிய ஆட்சி அமைந்த பிறகு, முதல்வா் ஜோசப் விஜய்யை, சென்னை மேயா், துணை மேயா் உள்ளிட்டோா் மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை என்ற சா்ச்சை எழுந்தது. புதிய அரசின் அனுமதியில்லாததால் மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஜூன் மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் வரும் 24 -ஆம் தேதி நடைபெறும் எனவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஆடை தொழிற்சாலையில் மோதல்: சக ஊழியரை கொலை செய்த நபா் கைது
சென்னை மாநகராட்சியில் 43 அலுவலா்கள் பணியிட மாற்றம்

வரும் ஜூலையில் வீடுகள் கணக்கெடுப்பு
சென்னை மாநகராட்சிக் கூட்டம்: முதல்வரைச் சந்தித்து அனுமதி பெறுவாரா மேயா்?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



