இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

84 குற்றவாளிகள் கைது: 7.31 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்

84 குற்றவாளிகள் கைது: 7.31 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்

News image
Updated On :25 மே 2026, 12:04 am IST

சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 84 பேரை கைது செய்த போலீஸாா், 5.25 கிலோ கஞ்சா, 2.6 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவின் பேரில், சென்னை நகரில் பெண்கள், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள், போதைப் பொருள்கள் விற்போா், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபா்களை கண்காணித்து கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

அந்த வகையில், சென்னை நகரில் மட்டும் கடந்த சில நாள்களில் 45 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 84 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடம் இருந்து 5.25 கிலோ கஞ்சா, 3.5 கிராம் மெத்தபெட்டமைன், 115 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2.6 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.