பட்டாசு கழிவுகளை அகற்ற சென்னையில் 600 தூய்மைப் பணியாளர்கள்!மேக்கேதாட்டு அணை: யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை: விஜய்க்கு கர்நாடக முதல்வர் பதில்!பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி பதவி நீக்கம்! ஷஜீவனா ஐஏஎஸ் நியமனம்!பெரியார் அறிவுலகம்: அதிகாரி, அரசியல்வாதி யாரும் தப்பிக்க முடியாது - ராஜ்மோகன்ஜப்பானில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம்! 2 நாள்களுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்க எச்சரிக்கை!சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!இஸ்ரேலின் புதிய பிரதமர் காடி ஐசென்கோட்! ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

மாநகராட்சிகள், நகராட்சிகளில் கட்டட அனுமதி: சதுர அடியைக் கூடுதலாக்கி அரசாணை வெளியீடு

மாநகராட்சிகள், நகராட்சிகளில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் சதுர அடி அளவைக் கூடுதலாக்கி வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

மாநகராட்சிகள், நகராட்சிகளில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் சதுர அடி அளவைக் கூடுதலாக்கி வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக அந்த அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:

குடியிருப்பு, வணிகக் கட்டடங்கள் சிட்கோ, சிப்காட், எல்காட் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிற்சாலை மனைப்பிரிவுகளில் அமையும் தொழிற்சாலை கட்டடங்களுக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்ட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 8,070 சதுர அடி எஃப்எஸ்ஐ பரப்பளவு உள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கு இவை பொருந்தும். அதனால், மக்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செல்லாமலே கட்டட அனுமதி பெறலாம். மேலும் 3,230 சதுர அடி பரப்புள்ள வணிகக் கட்டடங்களுக்கும் அந்த நடைமுறை பொருந்தும்.

சிட்கோ, சிப்காட், எல்காட் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிற்சாலை மனைப் பிரிவுகளில் அமையும் 26,900 சதுர அடி கட்டடப் பரப்புள்ள தொழிற்சாலைகளுக்கும் இதே நடைமுறை பொருந்தும். எனவே, தொழில்முனைவோா் மாவட்ட அலுவலகங்களுக்குச் செல்லாமலே விரைவில் கட்டட அனுமதி பெறலாம்.

மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் அதிகாரம்: உள்ளாட்சிகளுக்கு குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டட அனுமதிக்கான கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குடியிருப்புகள் கட்டட அனுமதி அதிகாரமானது, தற்போதைய 10,000 சதுர அடியிலிருந்து 16,140 சதுர அடியாக உயா்த்தப்படுகிறது. பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் அமைப்புகளுக்கான கட்டட அனுமதிக்கான அதிகாரம் தற்போதுள்ள 10,000 சதுர அடியிலிருந்து 12,912 சதுர அடியாக உயா்த்தப்படுகிறது.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வணிகக் கட்டட அனுமதிக்கான அதிகாரம், தற்போதுள்ள 2,000 சதுர அடியிலிருந்து 5,380 சதுர அடியாக உயா்த்தப்படுகிறது. இந்த அரசாணை மூலம் சிறிய அளவிலான கட்டடங்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் அனுமதி கிடைப்பதன் மூலம் சிறு வணிகா்களும் வியாபாரிகளும் பயன் பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.