சுடச்சுட

  

  காஞ்சிபுரத்தில் பா.ஜ.க. சார்பில், உத்ரகண்ட் நிவாரண நிதியாக பொதுமக்களிடம் உண்டியல் மூலம் முதல் கட்டமாக சேகரிக்கப்பட்ட ரூ.11 ஆயிரத்தை தலைமையிடத்தில் ஒப்படைத்தனர்.

   தமிழக பா.ஜ.க. சார்பில் உத்ரகண்ட் நிவாரண நிதிக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம் நகர பா.ஜ.க. சார்பில் பொதுமக்களிடம் இருந்து நிவாரண நிதி திரட்டும் பணியை தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

   நகரத் தலைவர் ஓம்சக்தி பெருமாள் தலைமையில் காஞ்சிபுரத்தின் முக்கிய வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், வீடுகளில் கடந்த 2 நாள்களில் உண்டியல் மூலம் ரூ.11 ஆயிரம் நிவாரண நிதி திரட்டப்பட்டது. இத்தொகையை சென்னையில் உள்ள கட்சித் தலைமையிடமான கமலாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.

   நிவாரண நிதியாக குறைந்தது ரூ.25 ஆயிரம் திரட்ட முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக ரூ.11 ஆயிரம் தலைமையிடத்தில் ஒப்படைத்துள்ளோம். அடுத்த 2 நாள்களில் மீதி பணத்தை உண்டியல் மூலம் பொதுமக்களிடம் வசூல் செய்து ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக நகரத் தலைவர் ஓம்சக்தி பெருமாள் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai