சுடச்சுட

  

  உத்தரமேரூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்க 17-வது கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  கிளைத் தலைவர் லோ.வரகுணபாண்டியன் தலைமை வகித்தார். சோழா அரிமா சங்க பொறுப்பாளர் வெ.குணசேகரன், சங்கத் தலைவர் ஜி.காளிதாஸ், விமலா ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.கமல்கிஷோர், செந்தமிழ் கவிஞர்கள் சங்கத் தலைவர் எம்.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

  சு.சேதுராமன் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியை நடத்தினார். உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் குறித்து விமல் எடுத்துரைத்தார். மாவட்டச் செயலாளர் கே.முனுசாமி, ஆர்.வரதராஜன் ஆகியோர் ஆகஸ்ட் மாதம் செங்கல்பட்டில் நடைபெறும் மாநில மாநாடு குறித்து விளக்கி பேசினர்.

  இணைச் செயலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். செயலர் தி.பழனி செயலறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜோதிசாமி வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார். இணைச் செயலர் ந.அன்பழகன் உள்ளிட்டோர் கலநது கொண்டனர். துணைத் தலைவர் த.பாரதிராஜா நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai