சுடச்சுட

    

    உத்தரமேரூரில் தே.மு.தி.க. சார்பில் கட்சித் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    தே.மு.தி.க. உத்தரமேரூர் ஒன்றியச் செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எ.சத்தார். ஒன்றிய அவைத் தலைவர் இ.வீரமணி, பொருளாளர் எம்.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரூர் செயலாளர் ஜி.கே.வெங்கடேசன் வரவேற்றார். பேச்சாளர் தம்பி முருகன், காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.ரமேஷ் பிரபாகரன் ஆகியோர் வரும் ஆகஸ்ட் 25-ல் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்துப் பேசினர். 

    மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்றனர். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் தெ.பழனி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.பி.அருண்குமார்,

    ஒன்றிய துணைச் செயலாளர் கே.சங்கர், பேரூர் அவைத்தலைவர் ஆர்.தென்னரசு, பேரூர் பொருளாளர் எஸ்.எம்.வேலன், டி.உதயகுமார் ஆகியோர் பேசினர். பேரூர் இளைஞரணி செயலாளர் எஸ்.குமார் நன்றி கூறினார். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai