சுடச்சுட

    

    பள்ளிசெல்லா குழந்தைகள்: தகவல் அளிக்க ஆட்சியர் வேண்டுகோள்

    By காஞ்சிபுரம்,  |   Published on : 01st July 2013 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிசெல்லா குழந்தைகள் குறித்து தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆட்சியர் லி. சித்ரசேனன் தெரிவித்துள்ளார்.

     அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் முறையாகப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    அதன்படி வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து புலம் பெயர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வருபவர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிறப்புக் கல்வி அளிக்க மாவட்ட அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

     புலம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லவில்லை எனத் தெரிந்தால் உடனடியாக மாவட்டத் திட்ட அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்ககம், டாக்டர் பி.எஸ். சீனிவாசா நகராட்சி மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் என்ற முகவரிக்குத் தகவல் அனுப்பலாம்.

    மேலும் 044 - 27230456 என்ற தொலைபேசி எண்ணிலோ, 97888 58664 என்ற செல்போன் எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம் எனச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai