சுடச்சுட

  

  காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் 210 கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

  காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு, தமிழக அரசின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா மதுராந்தகம் கடப்பேரியில் அண்மையில் நடந்தது. இதில் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 210 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். திட்ட அதிகாரி சாந்தினி ஜெபரதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மதுராந்தகம் சட்டப்பேரவை உறுப்பினர் கணிதா சம்பத் 210 கர்ப்பிணிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் புடவை, ஜாக்கெட், வளையல்கள், மஞ்சள், குங்குமம், பழம், தாலிக்கயிறு, வேர்க்கடலை பர்ப்பி, எள்ளு உருண்டை உள்ளிட்டவைகள் அடங்கிய தட்டுகளை வழங்கினார்.

   இதில் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளி அப்பாதுரை, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுரேஷ்குமார், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai