சுடச்சுட

    

    மின்சாரம் பாய்ந்து இறந்த மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

    By காஞ்சிபுரம்  |   Published on : 01st July 2013 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளியில் மின்சாரம் பாய்ந்து இறந்த மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களைப் போலீஸார் சமரசம் செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா தூசியை அடுத்த மேனல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மின்சாரம் பாய்ந்து பிளஸ் 1 மாணவி கலைச்செல்வி சனிக்கிழமை இறந்தார்.

    காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பிறகு மாணவியின் உடல் உறவினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உறவினர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்தனர். மேலும், பள்ளியில் மின் இணைப்புகள் முறையாகக் கொடுக்கப்படவில்லை.

    மின்சாரம் தாக்கியவுடன் மாணவியை ஆசிரியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால், அவரைக் காப்பாற்றி இருந்திருக்கலாம். ஆனால் மின்சாரம் தாக்கி சுமார் 1 மணி நேரம் மாணவியை ஆசிரியர்கள் தனியாகப் படுக்க வைத்திருந்தனர்.

    ஊர் மக்களுக்குத் தெரிந்த பிறகுதான், பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால் அவர் இறக்க வாய்ப்பில்லை.  

    எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைக் கைது செய்து, வழக்குப்பதிவு செய்தால்தான் மாணவியின் உடலை வாங்குவோம் எனத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காஞ்சிபுரம் டி.எஸ்.பி. பாலச்சந்திரன், செய்யாறு டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில்தான் உள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாணவியின் உடலைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    மாணவி இறந்தது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், ஆய்வக பொறுப்பாளர் சங்கர் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக செய்யாறு டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai