சுடச்சுட

  

  வாலாஜாபாத் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கியதில், மின்சாரம் பாய்ந்து பசுவும், கன்றும் ஞாயிற்றுக்கிழமை இறந்தன.

  வாலாஜாபாத் அருகே அவலூர், கன்னடியன்குடிசை, அங்கம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 2 நாள்கள் மின்தடையால் இருளில் மூழ்கின. இப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள், மின்வயர்கள் ஆகியன போதிய பராமரிப்பின்மையால், மாதத்துக்கு 2 நாள் மின்சாரம் தடைபடுகிறது.

  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் கிராங்களில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. அவலூர் கூட்டு சாலையில் விசாலாட்சியின் பசு, கன்றுகள் மேச்சலுக்கு அனுப்பட்டன.

  அப்போது அந்தப் பகுதியில் அறுந்து தொங்கிய மின்கம்பியில் பசுவும், கன்றும் சிக்கியதில், மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தன. இது குறித்துப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai