சுடச்சுட

  

  அடுக்குமாடி குடியிருப்பில் வீடு:விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்புகாஞ்சிபுரம்

  By காஞ்சிபுரம்  |   Published on : 02nd July 2013 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் உத்தரவிட்டுள்ளார்.

   அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  காஞ்சிபுரத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வீட்டுவசதி வாரியம் சார்பில் வேலூர் வீட்டுவசதி பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி வருகிறது. மொத்தம் 1,376 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

  இதில் உயர் வருவாய் பிரிவினருக்கு 204 குடியிருப்புகள், மத்திய வருவாய் பிரிவினருக்கு 588, குறைந்த வருவாய் பிரிவினருக்கு 584 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் பகுதி- 2 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் இக்குடியிருப்புகளை வாங்க ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று வீட்டுவசதி வாரியம் அறிவித்திருந்தது.

  இந்நிலையில் ஜூலை 22 வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 22-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வேலூர் வீட்டுவசதி வாரிய பிரிவு அலுவலகத்தை 0416- 2252561 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai