சுடச்சுட

  

  "அம்மா' திட்டத்தை முறையாக நடத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஆட்சியர்

  By காஞ்சிபுரம்  |   Published on : 02nd July 2013 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்மா திட்டத்தை முறையாக நடத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் லி. சித்ரசேனன் எச்சரிக்கை விடுத்தார்.

  இதுகுறித்து அவர் கூறியது:  மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து அவர்கள் இருப்பிடத்துக்கே சென்று கேட்டறியும் திட்டம்தான் அம்மா திட்டம். இத்திட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதியோர், விதவை உள்ளிட்ட ஓய்வூதியம் தொடர்பான மனுக்கள்தான் அதிகமாக வருகின்றன. இந்த புகார் மனுக்கள் அனைத்தும் உடனடியாக முடித்து வைக்கப்படுகிறது.  மேலும், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு வரும் மனுக்களை சிறப்பு கவனம் செலுத்தி பரிசீலிக்க வேண்டும். நீர்நிலை பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளுக்கு அரசின் சட்டத்திட்டங்களுக்கு உள்பட்டு உடனடியாக தீர்வு காணலாம்.

   ஒருசில பகுதிகளில் அம்மா திட்டம் முகாம் காலை 11 மணிக்கு முடித்துவிட்டு அதிகாரிகள் சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. அதுபோன்று தவறு நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன். அவ்வாறு காலை 11 மணிக்கே சென்றுவிடுகின்றனர் என்ற தகவல் கிடைத்தால், நேரடியாக எனது கவனத்துக்கு பொதுமக்கள் கொண்டுவரலாம். அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா திட்டத்தை சிறப்பாக நடத்தி பொதுமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாண அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஆட்சியர் லி. சித்ரசேனன்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai