சுடச்சுட

    

    உத்தரமேரூர் ஒன்றியத்தில் ரூ.26 லட்சத்தில்கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

    By உத்தரமேரூர்,  |   Published on : 02nd July 2013 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரமேரூர் ஒன்றியத்தில் திங்கள்கிழமை அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் ரூ.26 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்புவிழா நடந்தது.

    ஒன்றியக் கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர்  அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். சித்தனக்காவூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ரூ.3.5 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடம், ஒழையூர் ஊராட்சியில் ரூ.10.10 லட்சத்தில் மூன்று வகுப்பறையும், சேந்தாங்குளம் ஊராட்சியில் ரூ.7 லட்சத்தில் இரண்டு வகுப்பறையும், காரியமங்கலம் ஊராட்சியில் ரூ.5.5 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் வகுப்பறை கட்டடங்களை உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன்

     திறந்துவைத்தார்.

    விழாவில் மாவட்ட கூடுதல் திட்ட அலுவலர் அன்பரசு, உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பச்சையப்பன், ஊராட்சி மன்றத் தலைவர்கள், தண்டரை அஞ்சலிதேவி தணிகைவேல், சேந்தாங்குளம் வரலட்சுமி கருணாநிதி, ஒழையூர் எல்லப்பன், சாலவாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் வனிதா முருகன், மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன், ஒழையூர் பள்ளி தலைமை ஆசிரியர் பர்னபாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai