சுடச்சுட

    

    பாலாற்று கூட்டு குடிநீர் திட்டம்: ரூ.1 கோடி ஒதுக்கீடு

    By செங்கல்பட்டு  |   Published on : 02nd July 2013 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கல்பட்டு மக்களின் நெடுநாள் கோரிக்கையான பாலாற்று கூட்டு குடிநீர் திட்டத்தை அமைக்க எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடியை, காஞ்சிபுரம் எம்.பி. விஸ்வநாதன் திங்கள்கிழமை வழங்கினார்.

    இதற்கான விழா செங்கல்பட்டில் நடந்தது. விழாவில் அவர் பேசியது: பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வந்தால் செங்கல்பட்டு மக்களின் குடிநீர்ப் பிரச்னை பெரும்பாலும் தீர்ந்துவிடும்.

    2011-2012-ஆம் ஆண்டு இத்திட்டத்துக்கு போதிய நிதி இல்லாததால், ரூ.30 லட்சத்தை மட்டுமே வழங்கினேன். தற்போது ரூ.70 லட்சத்தை வழங்கியுள்ளேன். இத்துடன் சேர்த்து இத்திட்டத்துக்கு மொத்தம் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளேன்.

    இத் திட்டத்தைக் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன்.  திட்டத்துக்காக குறைந்த அளவு நிதி மேலும் தேவைப்பட்டால் அதையும் தருகிறேன் என்றார்.

    பின்னர் எம்.பி. நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட ரூ.70 லட்சத்துக்கான உத்தரவுப் படிவத்தை விழாவுக்கு தலைமை வகித்த நகர்மன்றத் தலைவர் அன்புச்செல்வனிடம் வழங்கினார்.

    நகரமன்றத் துணைத் தலைவர் சரவணன், தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினரும் சேவாதள மாவட்டத் தலைவருமான சிவக்குமார், முன்னாள் நகர்மன்றத் தலைவர் கே.வேணு, காங்கிரஸ் மூத்த நிர்வாகி ரங்கநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    காங்கிரஸ் நிர்வாகிகள் விஷ்ணுதாஸ் ரெட்டி, வழக்குரைஞர் அன்புரோஸ், வட்டாரத்  தலைவர் சிங்கப்பெருமாள் கே.பால், மறைமலைநகர் நகரத் தலைவர் தனசேகரன், செங்கல்பட்டு நகரமன்ற உறுப்பினர்கள் சேட்டு, பாண்டுரங்கன், வேணுகோபால், சந்தோஷ்கண்ணன், காடப்பன், யுவனேசன், நித்யானந்தம் உள்ளிட்டோர் எம்.பி. விஸ்வநாதனுக்கு நன்றி தெரிவித்தனர்.

    விழாவில் உத்தரகண்டில் மழை வெள்ளத்தில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai