சுடச்சுட

    

    இலவச வீட்டுமனை கேட்டு ஆட்சியரிடம் மகளிர் குழு மனு

    By காஞ்சிபுரம்  |   Published on : 03rd July 2013 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் அருகே இலவச வீட்டுமனை கேட்டு மகளிர் குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரை அடுத்து உள்ளது வேடல் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழு அமைப்பினர் ஜெயலட்சுமி தலைமையில் 19 பேர் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனு: பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 19 குடும்பத்தினர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வேடல் கிராமத்தில் பிழைப்பு தேடி வந்தோம். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் நாங்கள் எங்கள் கிராமத்தில் உள்ள புறம்போக்கு இடத்தில் இலவச வீட்டுமனைக் கேட்டு விண்ணப்பித்தோம். இங்கு சர்வே எண் 179 நத்தம் புறம்போக்கு, சர்வே எண் 1751 தோப்பு புறம்போக்கு இடங்கள் காலியாக உள்ளன.

    இதில் இலவச வீட்டுமனை  வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai